போலிஸ் உயரதிகாரிகளின் வீடுகளில் துணி துவைப்பது, தோட்ட வேலை செய்வது, காய்கறி வாங்குவது போன்ற எடுபிடி வேலைகளில் போலி சாரைப் பணியமர்த்தக்கூடாது என்று தமிழக தலைமை போலிஸ் இயக்குநர் அசோக் குமார் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, சென்னை யில் மட்டும் அத்தகைய வேலைகளைச் செய்து வந்த சுமார் 700 போலிசார் இனி காவல் பணிக்குத் திரும்புகின் றனர். சென்னையில் கொலை, கொள்ளை, வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் அவற்றைத் தடுப்பதிலும் குற்றவாளிகளைப் பிடிப்பதி லும் காலதாமதம் ஏற்படுகிறது. போதிய எண்ணிக்கையில் போலிசார் இல்லாததே இதற்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது.
இதற்கிடையே, சில நாட்களுக்குமுன் தமிழக தலை மைச் செயலாளர் டாக்டர் ராம மோகன ராவைச் சந்தித்துப் பேசிய திரு அசோக் குமார், தமிழகத்தில் பெருகி வரும் குற்றச் செயல்களைத் தடுப்ப தற்கு எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார். அப்போது, தமிழகக் காவல்துறையில் காலியாக உள்ள 25,000 பணியிடங் களை நிரப்புவதற்கு நடவ டிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் தலைமைச் செயலாளரிடம் வலியுறுத்திய தாகத் தெரிவிக்கப்பட்டது.

