காஷ்மீரில் கலவரம், ஊரடங்கு; 17 பேர் பலி, பதற்றம் நீடிப்பு

காஷ்மீரில் கலவரம், ஊரடங்கு; 17 பேர் பலி, பதற்றம் நீடிப்பு

2 mins read
9d5418c3-f1a7-466b-820d-873dde62392e
-

ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கர வாத அமைப்பின் தளபதிகளில் ஒருவனான புர்ஹான் முஸாஃபர் வானி பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டதைக் கண்டித்து காஷ்மீர் மாநிலத்தில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்களில் 17 பேர் பலியாகினர். கடந்த 2010ஆம் ஆண்டு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத் தில் பாதுகாப்புப் படையினருக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறையில் காலித் என்ற 21 வயது இளையர் போலிசாரின் துப்பாக்கிச்சூட்டில் பலியானார். இதைத் தொடர்ந்து, அப்போது 15 வயதான அவரது சகோதரன் புர்ஹான் பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்டு ஹிஸ்புல் இயக்கத்தில் சேர்ந்தான். இந்த நிலையில், கோகர்நாக் காட்டுப்பகுதியில் மறைந்திருந்த புர்ஹான் உட்பட மூன்று பயங்கர வாதிகளைப் பாதுகாப்புப் படை யினர் சுட்டுக்கொன்றனர்.

புர்ஹானின் உடல் டிரால் நகரில் வசிக்கும் அவனுடைய பெற்றோரிடம் ஒப்படைக்கப் பட்டது. நேற்று முன்தினம் நடந்த அவனது இறுதிச் சடங்கில் ஆயி ரக்கணக்கானோர் பங்கேற்றனர். புர்ஹான் கொல்லப்பட்டதைக் கண்டித்து காஷ்மீரின் பல பகுதி களில் கலவரம் வெடித்தது. இரண்டு போலிஸ் நிலையங்களும் மத்திய ரிசர்வ் போலிஸ் படை முகாம் ஒன்றும் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. குல்காம் மாவட்டத்தில் உள்ள பாஜக அலு வலகத்தையும் ஆர்ப்பாட்டக் காரர்கள் சூறையாடினர். மேலும் பல இடங்களில் பாதுகாப்புப் படையினரைக் குறி வைத்து பெட்ரோல் குண்டு களையும் கற்களையும் வீசி ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, கண் ணீர்ப்புகைக் குண்டுகளை வீசி போலிசார் கலைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அந்த முயற்சி ஈடேறாததால் பிறகு அவர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். கலவரத்தில் நேற்று முன் தினம் மட்டும் 15 பேர் மாண்டனர். இதையடுத்து, மாநிலம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டது. கைபேசி இணைய சேவையும் முடக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் நடத்திய பெட்ரோல் குண்டு, கல்வீச்சுத் தாக்குதலிலும் கூட்டத்தைக் கலைக்க பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டிலும் சிக்கி பலர் உயிரிழந்தனர். படம்: ஏஎஃப்பி