சென்னை: தமிழகத்தில் மேலும் ஆயிரம் டாஸ்மாக் மதுக்கடை களை மூட முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து எந்தெந்த பகுதி களில் உள்ள கடைகளை மூட லாம் என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருவதாக தமிழக ஊடகம் தெரிவித்துள்ளது. இத னால் பூரண மதுவிலக்கை வலியு றுத்தி போராடி வரும் சமூக ஆர் வலர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தமிழகத்தில் முழு மது விலக்கை அமல்படுத்த வேண்டும் எனும் கோரிக்கை நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு அமலுக்கு வரும் என திமுக, மக்கள் நலக் கூட்டணி, பாமக உள்ளிட்ட கட்சிகள் தங்கள் தேர் தல் அறிக்கையில் அறிவித்தன. ஆனால் அதிமுக மட்டுமே மது விலக்கு என்பது படிப்படியாக அமல்படுத்தப்படும் என்று தெரிவித்திருந்தது.
இந்நிலையில் மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்றதையடுத்து, தேர்தல் வாக்குறுதியின்படி முதற் கட்டமாக ஐநூறு மதுக்கடைகளை மூட உத்தரவிட்டார் முதல்வர் ஜெயலலிதா. அது மட்டுமல்லாமல், மதுக்கடைகள் இயங்கும் நேரத் தையும் 2 மணி நேரம் குறைத்தார். முன்பு காலை பத்து மணி முதல் இயங்கி வந்த மதுக்கடைகள் இப் போது 12 மணிக்குதான் திறக்கப் படுகின்றன. இந்நிலையில் தமிழகம் முழுவ தும் மேலும் ஆயிரம் மதுக்கடை களை மூடுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறப்படுகிறது. மூடவேண்டிய கடைகளை கணக்கெடுக்கும் பணியில் வட்டாட்சியர்கள் தலை மையிலான குழு மேற்கொண்டுள் ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

