மதுக்கடையை மூட வலுக்கும் போராட்டம்

மதுக்கடையை மூட வலுக்கும் போராட்டம்

1 mins read
b533a887-ed03-430f-8b3e-e9dc4cb297ec
-

சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையை மூட வலியுறுத்தி நடைபெறும் போராட்டங்கள் மேலும் வலுவடைந்துள்ளன. அண்மையில் இப்பகுதியில் நடந்த வழிப்பறி முயற்சியின்போது இளம்பெண் ஒருவர் உயிரிழந்தார். வழிப்பறியில் ஈடுபட்ட நபர் மது அருந்தியிருந்தது தெரியவந்தது. இதையடுத்தே இப்பகுதி மதுக்கடையை மூட வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. நேற்று முன்தினம் தென்சென்னை காங்கிரஸ் சார்பிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. படம்: சதீஷ்