கணவன், மனைவி, மகன் ஆகி யோரை சாலை ஓரத்தில் ஏராளமா னோர் முன்னிலையில் கொடூரமாக தாக்கிய போலிசார் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். மேலும் அவர்கள் நடந்துகொண்ட விதத்தை விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நகர் தேக்கம்பாடியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ராஜா (38). இவரது மனைவி உஷா (35), மகன் சூரியா (18). இவர்கள் மூவரும் உறவினர் திருமணத்துக்காக நகை வாங்க நேற்று முன்தினம் பிற்பகலில் செங்கம் பேருந்து நிலையம் அருகில் உள்ள நகைக் கடைக்குச் சென்ற னர். அப்போது நகையைத் தேர்வு செய்வதில் கணவன், மனைவி இடையே வாய்த்தகராறு ஏற்பட் டிருக்கிறது.
தம்மை கன்னத்தில் அறைந்த கணவரோடு உஷா சண்டையிட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மூன்று போலிசார் என்ன வென்று விசாரிக்கவே 'இது எங் கள் குடும்ப விவகாரம் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்' என்று ராஜா கூறியிருக்கிறார். இதில் ஆத்திரமடைந்த போலி சார், 'எங்களிடமே திமிராக பேசுகி றாயா?' என்று கேட்டபடி கணவன், மனைவி, மகன் என மூவரையும் லத்தியால் சரமாரியாகத் தாக்கி இருக்கின்றனர். இதன் உச்சமாக ஒரு போலிஸ்காரர் தனது பூட்ஸ் காலால் எட்டி உதைத்து இருக்கிறார். போலிசாரின் அடி, உதையை தாங்க முடியாமல் மூவரும் அங்கும் இங்கு மாக ஓடி தத்தளித்தனர்.

