ஜெகத்ரட்சகன் வீட்டில் சோதனை: கருணாநிதி புகார்

ஜெகத்ரட்சகன் வீட்டில் சோதனை: கருணாநிதி புகார்

1 mins read

சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் வீட்டில் அண்மையில் நடத்தப்பட்ட சோதனை தொடர்பில் திமுக தலைவர் கருணாநிதி சந்தேகம் எழுப்பியுள்ளார். சோதனை என்ற பெயரில் ஜெகத்ரட்சகனின் உடல்நிலை யைக் கருத்தில் கொள்ளாமல் அவரை வீட்டில் அடைத்து வைப் பது சட்டத்துக்குப் புறம்பானது என்றும் அறிக்கை ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார். "ஜெகத்ரட்சகன் வீட்டில் சோதனை என்ற பெயரில் கடந்த 3 நாட்களாக வருமான வரித் துறையினர் அவரை சிறைக்கைதி போல வீட்டில் அடைத்து வைத்துள் ளதாக செய்திகள் வருகின்றன. ஒரு வீட்டில் விசாரணை நடத்து வது தவறல்ல. ஆனால் 40 இடங்களில் சோதனை நடத்துவ தாகக் கூறி, ஜெகத்ரட்சகனை வீட்டில் அடைத்து வைப்பது சரியல்ல," என்று கருணாநிதி கூறியுள்ளார்.

வருமான வரித் துறையினரின் இத்தகைய நடவடிக்கைக்கு அரசி யல் காரணங்கள் இருக்குமோ என்ற சந்தேகம் எழுவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், சோதனை நடத்த தேவையான அளவு அதி காரிகளை அளிக்காமல், இரவு பகல் பாராமல் ஜெகத்ரட்சகன் வீட்டில் சோதனையிடுவது கண்டிக்கத்தக்கது என்றும் தெரி வித்துள்ளளார். மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ஜெகத்ரட்சகன் திமுக சார்பில் அமைச்சராகப் பொறுப்பு வகித்தார்.