சென்னை: முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மீதான ரூ.525 கோடி லஞ்சப் புகார் தொடர்பில் சிபிஐ விசாரணை நடத்தக் கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசுக்கும் சிபிஐக்கும் உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட் டுள்ளது. இரண்டு வாரங்க ளுக்குள் பதிலளிக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த எஸ்.பி.ஸ்ரீனிவாஸ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், சூரிய மின்சக்தி உற் பத்தி நிறுவனங்களிடம் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் ரூ.525 கோடி லஞ்சம் வாங்கி யதாக குற்றம்சாட்டி உள்ளார். "உத்தரப்பிரதேசம் போன்ற வட மாநிலங்களில் ஒரு யூனிட் சூரியசக்தி மின்சாரம் ரூ.5.01க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. தமிழகத்தில் மட்டும் தனிப்பட்ட சிலரின் சுயலாபத்துக்காக ரூ.2 அதிகம் கொடுத்து ரூ. 7.01க்கு கொள்முதல் செய்ய தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகம் ஒப்பந்தம் போட்டுள்ளது.
"இதன் மூலம் தனியார் நிறுவனங்களிடம் இருந்து நத்தம் விஸ்வநாதனுக்கு மட்டும் ரூ.525 கோடி லஞ்சம் கைமாறியுள்ளது. ஆனால், கொள்முதல் விலையைக் கூடுதலாகக் கொடுப்பதன் மூலம் மின்பகிர்மானக் கழகத்துக்கு ரூ.25 ஆயிரம் கோடி வரை இழப்பு ஏற்படும்," என ஸ்ரீனிவாஸ் தமது மனுவில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக லஞ்ச ஒழிப் புத்துறை இயக்குநரிடம் தாம் ஏற்கெனவே புகார் அளித்ததாகக் குறிப்பிட்டுள்ள அவர், அப்புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க தேவையில்லை என தலைமைச் செயலாளர் பரிந்துரைத்துள்ளதாக வும் கூறியுள்ளார். இதையடுத்தே இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என தாம் கோருவதாக அவரது மனுவில் கூறப்பட்டுள்ளது. இம்மனு தொடர்பாக சிபிஐ, தமி ழக லஞ்ச ஒழிப்புத் துறை இயக்கு நர் உள்ளிட்டோர் 2 வாரத்தில் பதில் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது.

