தங்கம் கடத்தி வந்த பெண் கைது

தங்கம் கடத்தி வந்த பெண் கைது

1 mins read

சென்னை: கோலாலம்பூரில் இருந்து தங்கக் கட்டிகளைக் கடத்தி வந்த பெண் சென்னை விமான நிலையத்தில் கைதானார். வியா ழக்கிழமை அதிகாலை மலேசியாவிலிருந்து சென்னை வந்த விமானப் பயணிகள் வழக்கமான சோதனைக்கு உட்படுத்தப் பட்டனர். அப்போது ஆந்திர மாநிலம் கடப்பாவைச் சேர்ந்த 38 வயதான பத்மா என்ற பெண் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து அவரது உடைமைகளைச் சோதனை யிட்டபோது துணிகளுக்கு மத்தியில் தலா 100 கிராம் எடை கொண்ட 5 தங்கக் கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றின் மதிப்பு ரூ.15 லட்சம் ஆகும்.