மதுரை: ஷேர் ஆட்டோக் களின் முறைகேட்டுக்கு முற்றுப்புள்ளி வைப்பேன் என்று டிராபிக் ராமசாமி கூறினார். விதிமுறைகளை மீறிய ஷேர் ஆட்டோக்களை தடுத்து நிறுத்திய டிராபிக் ராமசாமி கூறியதாவது: "மதுரையில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. இதில் பெரும்பாலானவை விதிமுறைகளை மீறி இயக்கப்படுவதால் பொதுமக்களுக்குப் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. "சில நேரங்களில் விபத்துகளும் நடந்து உயிர்ப்பலி ஏற்படுகிறது. இதனைத் தடுக்கவே நான் நடவடிக்கையில் இறங்கியுள்ளேன். "இன்று ஷேர் ஆட்டோக்களை மறித்த நான் இன்னும் சில நாட்கள் மதுரையில் தங்கி ஷேர் ஆட்டோக்களை கண்காணிப்பேன். மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் வழக்கும் தாக்கல் செய்ய உள்ளேன்," என்று அவர் கூறினார்.
டிராபிக் ராமசாமி: முறைகேட்டுக்கு முற்றுப்புள்ளி வைப்பேன்
1 mins read
-

