ராமநாதபுரம்: சிறிய ரக பாரசூட் வெடித்த நிலையில், அதனருகே சில கம்பியில்லா தகவல் தொடர்பு கருவிகளும் காணப்பட்டதால் ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே பரபரப்பு நிலவுகிறது. இங்குள்ள விலக்கு கிராம வயல்வெளியில் அவை நேற்று முன்தினம் காணப்பட்டன. அவற்றைக் கைப்பற்றிய போலிசார், அந்த பாரசூட்டில் 'மேட் இன் ஜெர்மனி' என குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர். அதைப் பயன்படுத்தியது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் மேலும் கூறினர். கடலாடியில் கண்காணிப்புப் பணி தீவிரமடைந்துள்ளது.
வயல்வெளியில் வெடித்த நிலையில் கிடந்த பாரசூட்டால் பரபரப்பு
1 mins read

