திருச்சி: மக்கள் நலக்கூட்டணியில் உள்ள 4 கட்சிகளும் இணைந்து உள்ளாட்சித் தேர்தலைச் சந்திக்க இருப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சட்டப்பேரவை, உள்ளாட்சித் தேர்தலில் எடுத்த நிலைப்பாட்டை நாடாளுமன்றத் தேர்தலில் எடுக்க இயலாது என்றார். "நாடாளுமன்றத் தேர்தலில் எங்கள் நிலைப்பாடு மாறும். அச்சமயம் மதவாத சக்திகளை எதிர்க்க, ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைக்கும் வகையில் எங்கள் நிலைப்பாடு இருக்கும். இது தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகே முடிவெடுக்கப்படும்," என்று திருமாவளவன் கூறினார்.
உள்ளாட்சித் தேர்தலை இணைந்து சந்திப்போம்: திருமா அறிவிப்பு
1 mins read
-

