பாஜகவில் இருந்து விலகினார் மேலவை உறுப்பினர் நவ்ஜோத்

பாஜகவில் இருந்து விலகினார் மேலவை உறுப்பினர் நவ்ஜோத்

1 mins read
e3c4a007-03fc-4b38-bb30-ce5d21a59de0
-

புதுடெல்லி: பாரதிய ஜனதா கட்சியின் மேலவை உறுப்பினரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத் சிங் சித்து (படம்) தனது பதவியிலிருந்து விலகியிருக்கிறார். இவர் ஆம்ஆத்மி கட்சியில் சேரக்கூடும் என்று புதுடெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த நவ்ஜோத் சிங் சித்து மாநிலத் தேர்தல்களிலும் மற்றும் நாடாளுமன்ற தேர்தலிலும் பாரதிய ஜனதாவுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டார். இதனையடுத்து இவருக்குக் கடந்த ஏப்ரல் மாதம் பாஜக மேலிடம் நியமன மேலவை நாடாளுமன்ற உறுப்பினர் பொறுப்பை வழங்கியது. இந்த நிலையில் இவர் மீது பாஜக மேலிடத்துக்கு அதிருப்தி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.