முதல்வர் பாத்திரம் கழுவிய முதல்வர் கெஜ்ரிவால்

முதல்வர் பாத்திரம் கழுவிய முதல்வர் கெஜ்ரிவால்

1 mins read
30355c0f-15fd-460d-912d-735f23739abb
-

அமிர்தசரஸ்: சீக்கியர்களின் புனித நூலை ஆம் ஆத்மி கட்சியினர் அவமதித்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து, அக்கட்சித் தலைவரும் டெல்லி முதல்வருமான கெஜ்ரிவால் பொற்கோயிலில் பாத்திரங்களைக் கழுவினார். கடந்த மாதம் அவர் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட போது பொற்கோயில் இருந்த பக்கத்தில் கட்சியின் சின்னமான துடைப்பம் இடம்பெற்றிருந்தது. இதனால் பலத்த சர்ச்சை கிளம்பியது. இந்த நிலையில் நேற்று பொற்கோயிலில் சில கட்சி நிர்வாகிகளுடன் சேர்ந்து அரவிந்த் கெஜ்ரிவால் பாத்திரங்களைக் கழுவி பக்தர்களுக்கு உணவு பரிமாறினர்.