லோதா குழு பரிந்துரை; பறிபோகும் பதவிகள்

லோதா குழு பரிந்துரை; பறிபோகும் பதவிகள்

1 mins read

புதுடெல்லி: லோதா குழுவின் பரிந்துரையால் இந்தியக் கிரிக் கெட் வாரிய பொறுப்பில் இருக்கும் பலரின் பதவிகள் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் அனுராக் தாக்கூர், செயலாளர் அஜய் ‌ஷிர்கே, பொருளாளர் அணிருத் சவுத்ரி, இணை செயலாளர் அமிதாப் சவுத்ரி ஆகியோரும் தங்கள் மாநில பொறுப்பை இழக்க நேரிடும். 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் பொறுப்பில் இருக்கக்கூடாது என்பதில் சரத்பவார் உள்ளிட்ட சிலர் தங்களது பதவியை இழக்க நேரிடலாம். லோதா குழுவின் பெரும்பாலான பரிந்துரைகளை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம் அவற்றை 6 மாதங்களுக்குள் அமல்படுத்த வேண்டும் என்று பிசிசிஐக்கு உத்தரவிட்டுள்ளது. இதன்படி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் உறுப்பினர்கள் ஆக இருக்க இயலாது.