சென்னை: நள்ளிரவில் ஏற்பட்ட திடீர் நில அதிர்வு காரணமாக சென்னை புறநகர்ப் பகுதிகளில் நேற்று முன்தினம் பரபரப்பு நிலவியது. இதனால் பீதியடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதியில் கூடினர். பம்மல், பொழிச்சலூர், அனகாபுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் ஏறத்தாழ பத்து முதல் பதினைந்து நொடிகள் வரை இந்த நில அதிர்வு நீடித்தது. இதனால் உயிருடற் சேதம் ஏதும் ஏற்படவில்லை.
சென்னை புறநகரில் நில அதிர்வு
1 mins read

