பெண் குழந்தையைக் கொண்டாடும் குஜராத் மருத்துவமனை

பெண் குழந்தையைக் கொண்டாடும் குஜராத் மருத்துவமனை

1 mins read

அகமதாபாத்: குஜராத்தில் முதல்வர் ஆனந்திபென் படேல் தலைமையிலான பாஜக ஆட்சி நடக்கிறது. இங்குள்ள அகமதாபாத் நகரில் சிந்து சேவா சமாஜம் நடத்தும் சிந்து மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தால் குழந்தைகளின் பெற்றோர் மகிழ்ச்சியுடன் இனிப்புகள் வழங்குகின்றனர்; பெண் குழந்தை பிறந்தால் வருத்தம் கொள்கின்றனர். இந்நிலையை மாற்ற பெண் குழந்தை பிறந்தால் மருத்துவமனையின் செலவில் உறவினர்கள் வரவழைக்கப்பட்டு, கேக் வெட்டி கொண்டாடி அனைவருக்கும் வழங்குகின்றனர். மேலும், பெண் குழந்தை களின் பெற்றோரிடம் எந்தக் கட்டணமும் வசூலிப்பதில்லை. மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இத்திட்டம் துவங்கப்பட்டதாக மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் மகாதேவ் லோஹ்னா கூறியுள்ளார்.2016-07-22 06:00:00 +0800