அதிரடி சோதனை; காவலரை தூக்கிவிடும் பெண் அதிகாரி

அதிரடி சோதனை; காவலரை தூக்கிவிடும் பெண் அதிகாரி

1 mins read
adf6171d-e608-4308-ac8e-c07f4da92efa
-

குவாலியர்: மத்தியப் பிரதேச மாநிலம், குவாலியரில் சட்ட விரோதமாக மண்ணெண்ணெய் பதுக்கி வைத்திருப்பதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, அங்கு சோதனை நடத்த உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து, மாவட்ட எஸ்.பி. ரித்திகா பகத் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். சேமிப்புக் கிடங்கின் நுழைவு வாயில்கள் அனைத்தும் அடைக் கப்பட்டு இருந்தன. சுற்றிலும் உயர்ந்த மதில் சுவர்கள் எழுப்பப்பட்டு இருந்தன. உடனடியாக ரித்திகா சுவரின் மீது கிடுகிடு வென்று ஏறினார். ஆனால், அவருடன் சென்ற ஆண் காவலரால் எவ்வளவுதான் முயற்சி செய்தும் சுவரின் மீது ஏறவே முடியவில்லை.

அவர் பலமுறை முயற்சி செய்து பார்த்தும் தொப்தொப் பென்று கீழே விழுந்து உள்ளார். இதனையடுத்து, சுவரின் மீது ஏறி சில அடி தூரம் சென்ற ரித்திகா, ஆண் காவலர் ஏற முடியாமல் சிரமப்படுவதை பார்த்து திரும்பி வந்து கைக் கொடுத்து உதவினார். பின்னர், அவர்கள் சேமிப்புக் கிடங்கில் நடத்திய சோதனையில் சுமார் 70,000 லிட்டர் மண்ணெண் ணெய்யை பறிமுதல் செய்தனர். அதனுடைய மதிப்பு ரூ. 50 லட்சம் என்று கூறப்பட்டுள்ளது.

சுவரின் மீது கிடுகிடுவென்று ஏறிய பெண் போலிஸ் அதிகாரி, ஆண் காவலரை மேலே தூக்கிவிட கைகொடுத்து உதவுகிறார். படம்: ஊடகம்