கோல்கத்தா: இந்தியாவில் பாரதிய ஜனதா கட்சி அரசு பசு மாட்டை வைத்து அரசியல் செய்வதாக மம்தா பானர்ஜி சாடியுள்ளார். "நாட்டு மக்களைப் பிரித்தாளும் அரசியலை ஒரு போதும் பொறுத் துக்கொள்ள முடியாது," என்று மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி. ஆட்சிக்கு வந்த போது பேசிய மம்தா, "காவி பாகுபாட்டு அரசியல்" குறித்துக் கடு மையாக விமர்சித்தார். இப்போது தியாகிகள் நாளை யொட்டி கோல்கத்தாவில் மிகப் பெரிய பேரணியில் மம்தா "பசு அரசியலை நிறுத்துமாறு பாஜக அரசுக்கு வேண்டுகோள் வைத்துள் ளார்.
ஒரு அரசியல் கட்சியின் சார்பாகவோ அல்லது அதன் சகோதர அமைப்பின் பெயரிலோ சிலர் வீடு வீடாகச் சென்று எவ்வளவு பசு மாடு வைத்திருக்கிறீர்கள் என்று கேட்பதாக நான் கேள்விப்படுகிறேன். இதுபோன்று கேள்வி கேட்க அவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? எது வேண்டும், எது வேண்டாம் என்று தேர்ந்தெடுக்கும் உரிமை மக்களுக்கு உள்ளது எனவும் இதை சிலர் மறந்துவிட்டனர் என்றும் அவர் கூறினார்.

