'பியூஷ் மானுஷை தாக்கிய காவலர்களை இடைநீக்கம் செய்யவேண்டும்'

'பியூஷ் மானுஷை தாக்கிய காவலர்களை இடைநீக்கம் செய்யவேண்டும்'

1 mins read

சென்னை: சேலம் சுற்றுச் சூழல் ஆர்வலர் பியூஷ் மானுஷைக் காவலர்கள் தாக்கியதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், தாக்கிய காவலர்களைப் பணி இடைநீக்கமும் செய்யவேண்டும் என மதிமுக பொதுச் செயலர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பறிப்பதும் அறப்போராட்டங்கள் நடத்து வோர் மீது காவல்துறையை ஏவி தாக்குதல் தொடுத்து ஒடுக்க முற்படுவதும் அதிமுக அரசின் வாடிக்கை எனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.