சென்னை: தமிழில் வாதாடியதால் வழக்கை தள்ளுபடி செய்வதுதான் நீதியா? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், நீதிபதிக்கு தமிழ் தெரியவில்லை என்றால் வழக்கை வேறு அமர்வுக்கு மாற்றுவதுதான் சரியானதாக இருக்கும் என கூறியுள்ளார். "மாறாக, தமக்கு மொழி தெரியாது என்பதற்காக வழக்கை தள்ளுபடி செய்வது மக்களுக்குக் கிடைக்க வேண்டிய நீதியை தட்டிப்பறிக்கும் செயல். இதை நீதித்துறை அனுமதிக்கக் கூடாது. எனவே, உயர்நீதிமன்ற அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும்," என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
தமிழில் வாதாடியதால் வழக்கு தள்ளுபடி: ராமதாஸ் கண்டனம்
1 mins read
-

