சென்னை: அண்ணா நூற்றாண்டு நூலகத்தைப் பராமரிக்கும் பணி தனியாரிடம் ஒப்படைக்கப்படும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அவ்வாறு உத்தரவிடப்படும் பட்சத்தில், அந்நடவடிக்கைக்குரிய செலவுகளை தமிழக அரசுதான் வழங்க வேண்டி வரும் என்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். சென்னையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பேராசிரியர் மனோன்மணி யம் என்பவர் அண்ணா நூற் றாண்டு நூலகம் முறையாகப் பராமரிக்கப்படவில்லை என புகார் எழுப்பியுள்ளார். இது தொடர்பாக உயர்நீதிமன் றத்தில் பொதுநல மனு ஒன்றையும் தாக்கல் செய்துள்ளார்.
சென்னை கோட்டூர்புரம் பகுதி யில், கடந்த திமுக ஆட்சிக்காலத் தில் அண்ணா நினைவு நூற் றாண்டு நூலகம் கட்டப்பட்டது என்றும் அதிமுக ஆட்சி அமைந்த பின்னர் அந்நூலகத்தை முறையாக பராமரிக்கவில்லை என்றும் தமது மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த மனுவை விசாரித்த பின் னர், நூலகத்தை ஆய்வு செய்ய இரு வழக்கறிஞர்களை நியமித்தது உயர் நீதிமன்றம். இருவரும் அளித்த ஆய்வில் நூலக பராமரிப் பில் உள்ள குறைபாடுகள் சுட்டிக் காட்டப்பட்டன.
அக்குறைகளை நிவர்த்தி செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட் டது. ஆனால் அதன் பிறகும் நூலகத்தை அரசு அதிகாரிகள் முறையாகப் பராமரிக்கவில்லை என மனோன்மணியம் தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்தது. இதையடுத்து இந்த வழக்கை விசாரித்து வரும் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, ஆகஸ்ட் 31ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டது. அதற்குள் நூல கத்தில் உள்ள குறைகள் அனைத் தையும் சரிசெய்யவேண்டும் என்றும் அவ்வாறு நடவடிக்கை எடுக்க வில்லை எனில் நூலகத்தைப் பரா மரிக்க தனியார் அமைப்பு ஒன்றை உயர் நீதிமன்றமே உருவாக்கும் என்றும் நீதிபதிகள் திட்டவட்ட மாகத் தெரிவித்துள்ளனர்.

