சென்னை: மெட்ரோ ரயில் திட்ட அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடியின் படம் இடம்பெறாதது ஏன்? என்று தமிழக பாஜக தலைவி தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், பிரதமர் மோடி தனது படம் விளம்பரப்படுத்தப்பட வேண்டும் என்று விரும்பமாட்டார் என்றாலும், மத்திய அரசு உதவியுடன் கூடிய திட்டங்களை மக்கள் மத்தியில் தெரியப்படுத்த பிரதமர் படம் அவசியம் என்று கூறியுள்ளார். "இனி இந்த மாதிரியான செயல்கள் தவிர்க்கப்பட வேண்டும்," என்று தமிழிசை கூறியுள்ளார்.
பிரதமர் மோடி படம்: தமிழிசை வலியுறுத்து
1 mins read
-

