நினைவிடத்தில் அப்துல் கலாம் சிலைக்கு எதிர்ப்பு

நினைவிடத்தில் அப்துல் கலாம் சிலைக்கு எதிர்ப்பு

1 mins read

கடந்த ஆண்டு ஜூலையில் மரணமடைந்த முன்னாள் இந்திய அதிபர் அப்துல் கலாம் உடல் ராமேசுவரம் அருகே பேய்கரும்பு என்னும் இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. நாளை மறுதினம் அவரது முதலாமாண்டு நினை வஞ்சலி கடைப்பிடிக்கப்படுகிறது. அப்துல் கலாமுக்கு நினைவு மண்டபம் கட்டுவதற்கு அன்றைய தினம் அடிக்கல் நாட்டுவதற்கான வேலைகள் நடைபெற்று வரு கின்றன.

நினைவு மண்டபத்தில் அப்துல் கலாம் உருவச்சிலை நிறுவவும் மத்திய அரசு முடிவு செய்திருப் பதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. ஆனால் அப்துல் கலாமுக்குச் சிலை எழுப்புவது இஸ்லாமிய மார்க்கத்துக்கு விரோதமானது என்று எதிர்ப்பு கிளம்பி உள்ளது. ராமநாதபுரம் மாவட்ட ஜமா அத்துல் உலமா சபையின் உயர் நிலைக் கூட்டத்தில் இதுதொடர் பாக தீர்மானம் ஒன்றும் நிறை வேற்றப்பட்டுள்ளது. இஸ்லாமியத் தலைவர்கள் யாருக்கும் இதுவரை சிலை வைக்கப்படவில்லை என்பது அக் கூட்டத்தில் நினைவுபடுத்தப்பட் டது. எனவே, அப்துல் கலாமுக்கு மணிமண்டபம், நூலகம், ஆராய்ச்சிக்கூடம் போன்றவற்றை நிறுவுவதில் மட்டும் கவனம் செலுத்துமாறு மத்திய, மாநில அரசுகளை அந்தக் கூட்டத்தில் பங்கேற்றவர்கள் கேட்டுக்கொண் டனர்.