ஆட்டையாம்பட்டி: திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி யில் எம்பிபிஎஸ் பயில இடம் கிடைத்தும் ஏழ்மையின் காரண மாக வருடாந்திர கல்விக் கட்ட ணம் செலுத்தமுடியாத நிலையில் மாணவி ரோஜா குடும்பத்தினர் பரிதவித்து வரும் நிலையில், மருத்துவ படிப்புக்கு தமிழக முதல்வர் நிச்சயம் உதவுவார் என்று மாணவியின் குடும்பத் தினர் நம்பிக்கை தெரிவித் துள்ளனர். தந்தைக்கு உதவியாக இப்போது கிழிந்த சாக்கு தைக் கும் பணியில் ஈடுபட்டு வரு கிறார் ரோஜா. சேலம் மாவட்டம், வீரபாண்டி தொகுதி, பனமரத்துப்பட்டி திரு வள்ளுவர் வீதியைச் சேர்ந்த கிழிந்த சாக்கு வியாபாரம் செய்து வரும் சங்கர்- திலகவதி தம்பதியரின் மூத்த மகள் ரோஜா. பனமரத்துப்பட்டி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 2014-ஆம் கல்வி ஆண்டில் ரோஜா 10-ம் வகுப்பு பயின்று 493 மதிப்பெண்களுடன் மாவட்டத்தில் 2-ம் இடத்தில் தேர்ச்சி பெற்றார்.பெண்களுடன் மாவட்டத்தில் 2-ம் இடத்தில் தேர்ச்சி பெற்றார்.
பிளஸ் -2ல் 1,152 மதிப் பெண் கள் பெற்றார். இந்நிலையில், மருத்துவப் படிப்பில் சேர்க்கை தொகை ரூ.13,600ஐ செலுத்தி உள்ளார். மளிகைக் கடைகளில் கிழிந்த சாக்குகளை வாங்கி அதனைத் தைத்து விற்பனை செய்து குடும்பத்தைக் காப்பாற்றி வரும் மாணவியின் தந்தை சங்கருக்கு ரோஜாவின் கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் ரூ.1,10,000 செலுத்தமுடியாத நிலை. சங்கருக்கு கவுசிகாதேவி என்ற இளைய மகளும் கவுதம் என்ற மகனும் உள்ளனர். குடும்பத்தைக் காப்பாற்றவே போதிய வருமானம் இல்லாததால் மகளின் படிப்புக்காக கல்வி உதவித்தொகை பெற அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வீரபாண்டி தொகுதி எம்எல்ஏ மனோன்மணி ஆகியோரிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.

