பள்ளி வேன் ரயிலில் மோதியதில் எட்டுக் குழந்தைகள் உயிரிழிந்தனர்

1 mins read

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பள்ளி வேனும் ரயிலும் மோதிக் கொண்டதில் எட்டுக் குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக இந்திய தகவல் சாதனங்கள் தெரிவித்தன. உத்தரப்பிரதேச மாநிலம் பாதோகியில் ஆளில்லா ரயில்வே கடப்பை பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் சென்ற வேன் கடக்க முயன்றபோது அந்த வழியாக வந்த அலகாபாத் = வாரணாசி பயணிகள் ரயில் வேன் மீது பயங்கரமாக மோதியது. கட்கா ரயில் நிலையத்துக்கும் மடோசிங் ரயில் நிலையத்துக்கு இடையேயுள்ள ரயில் பாதை = சாலைக் கடப்பில் விபத்து நடந்ததாக போலிசார் கூறினர். விபத்தில் சிக்கியி வேன் 'டென்டர்ஹார்ட்' என்ற பள்ளியின் மாணவர்களை ஏற்றிச் சென்றது.

வேனில் பயணம் செய்த 19 குழந்தைகளில் எட்டுக் குழந்தை கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 12 குழந்தைகள் படுகாயம் அடைந்தனர் என்று ஊடகச் செய்திகள் குறிப்பிட்டன. காயமடைந்தவர்கள் அனை வரும் பாதோகி, பிஎச்யு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனு மதிக்கப்பட்டுள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. குழந்தைகள் அனைவரும் 10 வயதுக்கு உட்பட்டவர்கள். இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளதாக செய்திகள் தெரிவித்தன.