லஹாட் டத்து ஊடுருவல்: 9 பேருக்கு ஆயுள் தண்டனை

லஹாட் டத்து ஊடுருவல்: 9 பேருக்கு ஆயுள் தண்டனை

1 mins read

கோத்தா கினபாலு: மலேசியாவில் லஹாட் டத்து, கம்போங் பகுதியில் ஆயுதங்களுடன் ஊடுருவி தாக்குதலில் ஈடுபட்ட பிலிப்பீன்ஸ் நாட்டவர்கள் 9 பேருக்கு சாபாவில் உள்ள நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. இந்த 9 பேரில் அமிர்பாகார் ஹுஸ்னின் கிரம், அவரது உறவினர் சுல்தான் ஜமாலுல் கிரம் ஆகியோரும் அடங்குவர். இவர்கள் அனைவரும் 2013-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சாபாவுக்குள் ஆயுதங்களுடன் ஊடுருவியதாகக் கூறப்பட்டது. அந்த 9 பேர் மீதும் 121 பிரிவு சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டது. ஒரு பயங்கரவாதக் குழுவின் உறுப்பினர்களாக இருந்ததற்காக மேலும் இருவருக்கு நீதிமன்றம் 18 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.