ராமேசுவரம்: இந்தியாவின் முன் னாள் அதிபர் மறைந்த அப்துல் கலாமின் முதல் ஆண்டு நினைவு நாள் நேற்று இந்தியா முழுவதும் அனுசரிக்கப்பட்டது. இந்த நினைவு நாளில் ராமே சுவரம் பேய்க்கரும்பில் அமைந் துள்ள அப்துல் கலாம் நினை விடத்தில் ஏழு அடி உயரத்தில் அவரது உருவச் சிலைத் திறந்து வைக்கப்பட்டது. மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு சிலையைத் திறந்து வைத் தார். இதில் மத்திய அமைச்சர்கள் மனோகர் பரிக்கர், பொன். ராதா கிருஷ்ணன், தமிழக அமைச் சர்கள், அப்துல் கலாமின் மூத்த சகோதரர் முகமது முத்து மீரான் லெப்பை மரைக்காயர், பேரன் ஷேக் சலீம் மற்றும் குடும்பத் தினர் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய திரு வெங்கய்ய நாயுடு, தமக்குத் தமிழ்த் தெரியும் என்றும் ஆனால் பேச இயலாதது எனக்கு மிகவும் வருத்தம் அளிக்கிறது என்றும் குறிப்பிட்டார். "விஞ்ஞானிகளில் மாறு பட்டவர். நாட்டுக்காகத் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர்," என்று அப்துல் கலாமுக்கு வெங் கய்ய நாயுடு புகழாரம் சூட்டினார். பின்னர், சிலையை நிறுவ கூடுதல் இடத்தை ஒதுக்கிய தமிழக முதல்வர் ஜெயலலி தாவுக்கு அவர் நன்றி தெரி வித்துக் கொண்டார். அப்துல் கலாமின் நினைவாக அருங்காட்சியகம், மணிமண்டபம், அறிவுசார் மையம் போன்றவை அமைக்க நிகழ்ச்சியில் அடிக்கல் நாட்டப்பட்டது. அதற்கான கல்வெட்டை மத்திய அமைச்சர்கள் திறந்துவைத்தனர். அப்துல் கலாம் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது இளமைப்பருவம் முதல் அதிபர் வரை பதவி வகித்த புகைப் படங்கள், அவரின் படைப்புகள், பயன்படுத்திய பொருட்கள் அடங் கிய தற்காலிக அருங்காட்சியகம் அவரது நினைவிடத்தில் அமைக் கப்பட்டிருந்தது. இதனை மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார். இதற்கிடையே அப்துல் கலாம் விட்டுச்சென்ற வெற்றிடத்தை யாராலும் நிரப்ப முடியாது. அப்துல் கலாம் என்ற மாமனிதருக்கு எனது அஞ்சலியைச் செலுத்துகிறேன்," என்று பிரதமர் மோடி குறிப்பிட்டு உள்ளார்.
'மாறுபட்ட விஞ்ஞானி'
2 mins read
-

