சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள கபாலி படத்தை மூத்த பத்திரிகையாளர் சோ தனது குடும்பத்தினருடன் சென்னையில் செவ்வாய்க் கிழமையன்று பார்த்து ரசித்தார். சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற நடிகர் ரஜினிகாந்த் சுமார் இரண்டு மாத இடை வெளிக்குப் பின் கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னைத் திரும்பினார். அதைத் தொடர்ந்து தனது நண்பரும் மூத்த பத்திரிகையாளருமான சோவுக்காக கபாலி படம் பார்க்க ஏற்பாடு செய்தார் ரஜினி. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள 'பிரிவியூ' திரையரங்கத்தில் சிறப்புக் காட்சிக்கு ஏற்பாடு செய்யப் பட்டது. அப்போது, சோவுடன் நடிகர் ரஜினிகாந்த், தயாரிப் பாளர் கலைப்புலி எஸ். தாணு, அவரது மகன் பரந்தாமன், படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட படக் குழுவினரும் இருந்தனர். இதற்கிடையே ரஜினிக்குப் பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று மராட்டிய எம்எல்ஏ அனில் கோடே கோரிக்கை விடுத்துள்ளார். மராட்டிய சட்டமன்றத்தில் பேசிய அவர், "இந்த மண் ணின் மைந்தரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு மராட்டிய அரசின் உயரிய விருதான மகாராஷ்டிரா பூஷண் விருது வழங்கி கௌரவிக்க வேண்டும். ரஜினிகாந்த் கோலாப்பூர் மாவட்டத்தில் சிவாஜி கெய்க்வாட் என்ற பெயரில் பிறந்தவர். பட வாய்ப்பு தேடித் தமிழ்நாடு சென்றார். இன்றைக்குத் திரைத் துறையில் கடவுளின் அவதாரத்துக்கு நிக ரான தகுதியைப் பெற்றுள்ளார். அவரது கபாலி படம் உலகம் முழுவதும் 8,000 திரையரங்கு களில் வெளியீடு ஆகி இந்திய சினிமாவில் அவருக்கு உரிய தகுதியைப் பறைசாற்றியிருக் கிறது. அவருக்குப் பாரத ரத்னா விருது வழங்கத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்," என்று கோரிக்கை விடுத்தார்.
கபாலி படம் பார்த்த சோ
2 mins read
-

