போக்கிமோன் கோ: முதல் விபத்து

போக்கிமோன் கோ: முதல் விபத்து

1 mins read

மும்பை: 'போக்­கி­மோன் கோ' விளை­யாட்டை தனது கைபே­சி ­யில் விளை­யா­டிக்­கொண்டே கார் ஓட்டியதால் எதிரில் வந்த ஆட்டோ மீது மோதி விபத்­துக்­குள்­ளா­னார் காரோட்­டி­யான ஜபர் அலி. இந்த விளையாட்டால் இந்தியாவில் பதிவாகியுள்ள முதல் விபத்து இது. உலகின் பல்வேறு நாடுகளில் இந்த விளையாட்டால் விபத்துகள் நடந்த வண்ணம் உள்ளன. எனவே, மும்பைப் போக்குவரத்துப் போலிசார் தங்களது சமூக வலைத்தளத்தில் சாலை பயணத்தின்போது விளை யாடுவது எத்தகைய ஆபத்தை விளைவிக்கும் என்ற விழிப்பு ணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.