புதுடெல்லி: கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு மக்கள் குடியேறுவது அதிகரித்து 2050ஆம் ஆண்டில் அறுபது விழுக்காடு இந்தியர்கள் நகரங்களில் வசிப்பர் என மத்திய இணை அமைச்சர் இந்தர்ஜித் சிங் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் பேசிய நகர்ப்புற மேம்பாட்டு இணை அமைச்சரான இந்தர்ஜித் சிங், "கடந்த 2011ல் எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 31 விழுக்காட்டினர் நகரங்களில் வசிக்கின்றனர். வரும் ஆண்டுகளில் நகரங்களில் மக்கள் குடியேறுவது அதி கரிக்கும். 2050ஆம் ஆண்டில் 60 விழுக்காடு இந்தியர்கள் நகரங்களில் வசிப்பர்," என்றார்.
2050ஆம் ஆண்டில் நகரங்களில் 60 விழுக்காடு இந்தியர்கள்
1 mins read

