கெஜ்ரிவால்: நான் கொல்லப்படலாம்

கெஜ்ரிவால்: நான் கொல்லப்படலாம்

2 mins read

புதுடெல்லி: ஆம் ஆத்மி கட்சியை அழிப்பதற்காக மத்திய அரசு என் னை கொல்லவும் செய்யலாம் என்றுÿடெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடுமையான குற்றச் சாட்டை முன்வைத்துள்ளார். ஆம் ஆத்மி கட்சித் தொண்டர் களுக்காக கெஜ்ரிவால் பேசிய 10 நிமிட காணொளி நேற்று இணை யத்தில் வெளியிடப்பட்டது. அதில் தாம் கொல்லப்படலாம் என்று கெஜ்ரிவால் கூறியிருந்தார்.

"ஆம் ஆத்மியின் தொண் டர்கள், எம்எல்ஏக்கள், அமைச் சர்கள் என அனைவரிடமும் நான் சொல்ல விரும்புவது நாம் இப் போது நெருக்கடியான காலக்கட் டத்தில் பயணித்துக் கொண்டிருக் கிறோம். எதிர்வரும் நாட்களில் இந்த நெருக்கடி மேலும் அதி கரிக்கும். ஆம் ஆத்மியை வெற்றி கொள்ள வேண்டும் என்பதற்காக அவர் (பிரதமர்) எந்த எல்லைக்கும் செல்வார். நாம் கொலை செய்யப் படலாம். நான்கூடக் கொல்லப் படலாம். எந்தத் தியாகத்துக்கும் தயாராக இருப்பவர்கள் மட்டும் எங்களுடன் சேர்ந்து நில்லுங்கள். எதையும் தாங்கும் வலு இல்லாத வர்கள், விலகி சென்றுவிடுங்கள்," என்றார் அவர்.

"ஆம் ஆத்மியை நசுக்க வேண்டும் என்பதற்காக சதித் திட்டம் தீட்டப்படுகிறது. இதற்கு மூளையாக இருப்பவர் மோடிதான். டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சி பொறுப்பேற்றது முதல் இதுவரை 10 எம்எல்ஏக்கள் கைது செய்யப் பட்டுள்ளனர். இதுதவிர இரட்டை பதவி வகிப்பதாக பொய் குற்றச் சாட்டை கூறி 21 ஆம் ஆத்மி எம் எல்ஏக்களின் பதவியைப் பறிக்க வும் முயற்சி நடக்கிறது. "இதற்கு என்ன காரணம்? டெல்லி மக்களின் நலனுக்காக ஆம் ஆத்மி அரசு மேற்கொள்ளும் பணிகளை மோடியால் ஜீரணிக்க முடியவில்லை என்று சிலர் கூறு கின்றனர். பஞ்சாப், கோவா, குஜ ராத் ஆகிய மாநிலங்களில் ஆம் ஆத்மிக்குப் பெருகி வரும் ஆதரவை மோடியால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை," என்று கெஜ்ரிவால் கூறினார்.

இதற்கிடையே ஆம் ஆத்மியின் தவறுகளை மறைப்பதற்காக மோடி மீது கெஜ்ரிவால் பழி சுமத்துகிறார் என்று பாஜக தேசிய செயலாளர் ஸ்ரீகாந்த் சர்மா தெரிவித்தார். "பிரதமர் மோடி மீதான கெஜ்ரி வாலின் குற்றச்சாட்டுகள் விரும்பத் தகாதது. சட்ட விதிகளை மீறு பவர்கள் யாராக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஊழலுக்கு எதிராக பேசும் கெஜ்ரி வால் தன் கட்சியினர் தவறை மறைப்பதற்காக மோடி மீது அவ தூறாக பேசக்கூடாது," என்றும் அவர் குறிப்பிட்டார்.