மீரட்: வரதட்சணையாக கார் கேட்டு மாப்பிள்ளை அடம் பிடித்ததால், இரண்டு மணி நேரத்தில் திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது. உத்தரப் பிரதேசத்தில் மோனி சாவுக்கும் முகமது ஆரிப் என் பவருக்கும் திருமணம் நடந்தது. மணமகன் வீட்டினர் வரதட்சணை யாக கேட்ட எல்லா பொருட் களையும் பெண்வீட்டார் கொடுத் தாகக் தெரிகிறது. இருப்பினும் சீர்வரிசையில் கார் இல்லாத காரணத்தினால் மோனிசாவை ஆரிப் திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் மோனிசா அழுதுகொண்டே இருந்ததுடன் தன்னுடைய புகுந்த வீட்டுக்குப் போகவும் மறுத்து உள்ளார். இதையடுத்து, பஞ்சா யத்தில் ஆரிப் மோனிசாவிடம் விவாகரத்துக் கேட்டதால் திருமணமான இரண்டு மணி நேரத்தில் அவர்களின் திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது. தவிர மோனிசா வீட்டினருக்கு 2.25 லட்சம் ரூபாய் அபராதமாக கொடுக்கவேண்டும் எனவும் ஆரிப் 3 ஆண்டுகளுக்கு வேறு யாரையும் திருமணம் செய்யக் கூடாது எனவும் பஞ்சாயத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கார் கிடைக்காததால் 2 மணி நேரத்தில் ரத்தான திருமணம்
1 mins read

