மாயாவதியை தரக்குறைவாகப் பேசிய பாஜக பிரமுகர் தயாசங்கர் கைது

மாயாவதியை தரக்குறைவாகப் பேசிய பாஜக பிரமுகர் தயாசங்கர் கைது

1 mins read
dc6d5f60-2336-4227-9f91-82ac68d1dd2d
-

லக்னோ: உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வரும் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவருமான மாயாவதியை விலைமாதோடு ஒப்பிட்டு தரக்குறைவாக விமர் சித்த பாஜக பிரமுகர் தயாசங்கர் சிங் (படம்) நேற்று பீகாரில் கைது செய்யப்பட்டார். அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பிய இந்த பிரச்சி னையையடுத்து அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அதேசமயம், தயாசங்கர் சிங் மீது லக்னோ காவல் நிலையத்தில் புகாரும் கொடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து அவரைத் தேடி வந்தனர். இதனால் தயாசங்கர் சிங் தலை மறைவானார். அவரைக் கைது செய்வதற்கு தீவிரம் காட்டிய லக்னோ காவல்துறையினர் நீதிமன்றத்தை அணுகி கைதாணை யும் பெற்றனர்.

இதையடுத்துக் கைது செய்ய தடை விதிக்கக் கோரி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் தயாசங்கர் சிங் மனு தாக்கல் செய்தார். இந்நிலையில், பீகார் மாநிலத் தின் புக்சர் நகரில் தயாசங்கர் சிங் தலைமறைவாக இருப்பதாகக் காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்துப் பீகார் சென்ற உ.பி. காவல்துறையினர், உள் ளூர் காவல்துறையினரின் உதவி யுடன் தேடும் பணியில் ஈடுபட் டனர். அப்போது, புக்சரில் பதுங்கி இருந்த தயாசங்கர் சிங்கைக் கைது செய்தனர். பின்னர் அவர் உத்தரப் பிரதேசத்திற்கு கொண்டு வரப்படுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.