சந்தேக நபரைக் கடித்த போலிஸ்

சந்தேக நபரைக் கடித்த போலிஸ்

1 mins read

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் விசாரணைக்கு அழைத்துச் சென்ற வாலிபரை போலிஸ் காரர் ஒருவர் கடித்துவிட்டார். ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திக், 23, என்ற தனியார் பள்ளி வாகன ஓட்டியை, ஒரு கபடி போட்டி தகராறு தொடர்பில் போலிஸ் கைது செய்தது. நிபந்தனை பிணையில் உள்ள கார்த்திக், ராமநாதபுரம் நீதிமன்றத்துக்கு கையெழுத்திட சென்றபோது வழியில் டீ சாப்பிட்டார். ராமநாதபுரம் கேணிக்கரை போலிஸ் ஏட்டு சுரேஷ் அங்கு வந்து கார்த்திக்கை கேணிக் கரை போலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார்.

அப்போது தான் நிரபராதி என்று சொல்லியும் தன்னை ஏட்டு சுரேஷ் இரண்டு கை விரல்களிலும் கடித்து துன் புறுத்தியதாக கார்த்திக் தெரி வித்தார். தனியார் மருத்துவ மனைக்குத்தான் செல்ல வேண்டும் என போலிஸ் மிரட்டியதாகவும் ஆனால் தான் ராமநாதபுரம் அரசு மருத்துவ மனைக்குச் சென்றதாகவும் கார்த்திக் தெரிவித்தார்.