ஆடிப்பெருக்கு மகிழ்ச்சி வெள்ளம்

ஆடிப்பெருக்கு மகிழ்ச்சி வெள்ளம்

2 mins read

சென்னை: ஆடிப்பெருக்குக்காக மேட்டூர் அணையிலிருந்து திறக் கப்பட்ட தண்ணீர் வியாழக் கிழமை மாலை திருச்சி வந்தடைந் தது. காவிரி நீர் கல்லணைக்கு வந்தடைந்ததால் திருச்சி, தஞ்சை மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந் துள்ளனர். விவசாயம் செழிக்கவும் குடும் பத்தில் மங்கள காரியங்கள் நடக்கவும் ஆடி மாதத்தில் பொங்கி வரும் காவிரி அன்னைக்கு மலர்தூவி வணங்கி வழிபடுவது காவிரி மாவட்ட மக்களின் வழக் கம். ஆடி மாதம் 18ம் நாள் (ஆகஸ்ட் 2ஆம் தேதி) ஆடிப் பெருக்கு கொண்டாடப்படுகிறது. ஆடிப்பெருக்கு விழாவை காவிரிக்கரையோரப் பகுதிகளில் பொதுமக்கள் நாட்டத்துடன் கொண்டாடுவர் என்பதால் கல் லணையிலிருந்தும் தண்ணீரைத் திறந்துவிட பொதுப் பணித் துறை முடிவுசெய்துள்ளது.

இதனால் இந்த ஆண்டு மகிழ்ச்சி வெள்ளம் கரைபுரளு கிறது. காவிரியாறு, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய் ஆகிய ஆறுகளிலும் தண்ணீர் திறக்கப் பட்டால் அந்த தண்ணீர் மற்ற பகுதிகளுக்கும் செல்ல வாய்ப்பு உள்ளது. கடந்தாண்டு ஆடிப்பெருக்குக் காக தண்ணீர் திறக்கப்பட்டாலும் திருவையாறு பகுதிக்கு முழு மையாகத் தண்ணீர் சென்றடைய வில்லை. திருவையாறு மக்கள் ஆடிப்பெருக்கு விழாவை கடந்த ஆண்டு உற்சாகமாகக் கொண் டாட முடியவில்லை. இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு இந்தப் பகுதிகளிலும் சிறப்பாக கொண்டாடப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. மேட்டூர் அணையிலிருந்து கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டிருப்பதால் காவிரியாற்றில் பல்வேறு இடங்களில் அமைக்கப் பட்டிருக்கும் கூட்டுக் குடிநீர்த் திட்டக் குழாய்களின் நிலத்தடி நீர்மட்டமும் உயரக்கூடும்.

இதனால், குடிநீர்ப் பற்றாக்குறை சற்றுக் குறைவதற்கான வாய்ப்பு களும் உள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. மேட்டூர் அணையிலிருந்து குடி நீர்த் தேவைக்காக விடுவிக்கப்பட்டு வரும் 2,000 கன அடி நீருடன், ஜூலை 25ஆம் தேதி முதல் வினா டிக்கு கூடுதலாக 3,000 கனஅடி நீர் திறக்கப்பட்டது. முக்கொம்பிலிருந்து 4,100 அடி வீதம் திறக்கப்பட்ட தண்ணீர், கல் லணைக்குச் சென்றடைந்தபோது வினாடிக்கு 3,800 கனஅடியாகத் தான் இருந்தது.