நேப்பாளத்தில் சிக்கிய தமிழர்கள் பாதுகாப்பாக மீட்பு

நேப்பாளத்தில் சிக்கிய தமிழர்கள் பாதுகாப்பாக மீட்பு

1 mins read

நேப்பாளம்: நேப்பாளத்திலுள்ள முக்திநாத் கோயிலுக்கு புனித யாத்திரை சென்ற காஞ்சிபுரம், வேலூர், சென்னை பகுதியைச் சேர்ந்த 10 பக்தர்கள் மலைச் சரிவு ஏற்பட்டதால் மலையில் சிக்கினர். அவர்களை நேப்பாள அதிகாரிகள் வியாழக்கிழமை பாதுகாப்பாக மீட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தைச் சேர்ந்தவர் களையும் சேர்த்து மொத்தம் 19 பேர் மீட்கப்பட்டனர். தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் பாதுகாப்பாகத் திரும்ப நடவ டிக்கைகள் எடுக்கப்படுவ தாகவும் அவர்கள் கூறினர்.