தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கத்தியுடன் சுற்றிய மாணவர்கள்

1 mins read

சென்னை: பேருந்து நிலையத்தில் கத்தியுடன் சுற்றித்திரிந்த கல்லூரி மாணவர்கள் 6 பேரை போலிசார் கைது செய்தனர். நேற்று முன்தினம் புதுவண்ணாரப்பேட்டை பேருந்து நிலையத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட பயணிகள் பேருந்துக்காகக் காத்திருந்தனர். அப்போது அங்கு வந்த கல்லூரி மாணவர்கள் சிலர், தங்கள் பையில் கத்திகளை மறைத்து வைத்திருப்பதைக் கண்ட பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அப்பகுதி போலிசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலிசார் பேருந்து நிலையத்துக்கு விரைந்தனர். அவர்களைக் கண்டதும் மாணவர்கள் சிதறி ஓட, விடாமல் விரட்டிச் சென்று ஆறு பேரை பிடித்தனர் போலிசார். அவர்களில் மூவரிடம் மட்டுமே கத்தி இருந்தது. மூவரைக் கைது செய்த போலிசார், மற்ற மாணவர்களை எச்சரித்து அனுப்பினர்.