புதுடெல்லி: குளச்சல் துறைமுகம் தொடர்பில கேரள முதல்வரின் கோரிக்கையை நிராகரித்த பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் நன்றி தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களி டம் பேசிய அவர், பிரதமரின் திட்டவட்டமான முடிவின் காரண மாக கன்னியாகுமரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கனவு நிறைவேற உள்ளது என்றார். கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே மிகப்பெரிய அனைத்துலகத் துறைமுகம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு ரூ.25 ஆயிரம் கோடி செலவாகும் என கணிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இத்திட்டத்திற்கு கேரள அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஏனெனில், குளச்சலில் இருந்து முப்பது கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கேரள மாநி லம் விழிஞம் பகுதியிலும் புதிய துறைமுகம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. அருகருகே இரு துறைமுகங் கள் அமைந்தால் அது கேரளாவுக் குப் பாதிப்பை ஏற்படுத்தும் என ஒரு தரப்பினர் கருதுகின்றனர். எனவே குளச்சல் துறைமுகத் திட்டத்துக்கு அம்மாநில அரசு எதிர்ப்புத் தெரிவிக்கிறது. இந்நிலையில், கேரள முதல்வர் பினராய் விஜயன் தலைமையிலான குழு ஒன்று பிரதமர் மோடியை அண்மையில் நேரில் சந்தித்து, குளச்சல் துறைமுகம் தொடர்பான கருத்துகளைப் பதிவு செய்தனர்.
ஆனால் கேரளாவின் கோரிக் கையைப் பிரதமர் மோடி ஒட்டு மொத்தமாக நிராகரித்தார். குளச் சலில் துறைமுகம் அமைப்பது உறுதி என்று அவர் திட்ட வட்டமாகத் தெரிவித்துள்ளார். இந்நிலையில் செய்தியாளர்களி டம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், இரு துறைமுகங்கள் அருகருகே அமைவதால் எந்தப் பிரச்சினையும் எழாது என்றார். குளச்சலில் துறைமுகம் அமைவதால் விழிஞத்துக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்று உத்தரவாதம் அளித்த அவர், அடுத்த கட்டமாக குளச்சல் பகுதியில் நிலங்கள் அளப்பது, சாலை, ரயில் பாதை அமைத்தல் போன்ற பணிகள் மாநில அரசு, மாவட்ட நிர்வாகம் மூலம் செயல் படுத்தப்படும் என்றார். "துறைமுகத் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டு விழா ஓரிரு மாதங்களில் நடக்கும். மிகப் பிரம் மாண்டமாக நடைபெறும் இந்த விழாவில் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுவார். "தமிழக மீனவர் பிரச்சினை தொடர்பாக மத்திய அமைச்சர் களை தமிழகம், புதுவை மீனவர் கள் சந்தித்துப் பேசினர். இதில் சுஷ்மா சுவராஜ் ஏற்கெனவே தெரி வித்த கருத்துகள் ஏற்றுக்கொள் ளப்பட்டன," என்றார்.

