மாயமான விமானம்: அமெரிக்காவிடம் உதவி கோரிய இந்தியா

மாயமான விமானம்: அமெரிக்காவிடம் உதவி கோரிய இந்தியா

2 mins read

புதுடெல்லி: அண்மையில் மாயமான விமானப்படை விமானத் தைக் கண்டுபிடிப்பதில் அமெரிக் காவின் உதவியை நாடியிருப்பதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார்.டெல்லியில் நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விமானத்தை தேடும் நடவடிக்கை யில் அது காணாமல் போன தருணத்தில் பதிவான செயற்கைக் கோள் புகைப்படம் தேவைப்படுகிறது என்றும், அமெரிக்காவிடம் அந்தப் புகைப்படத்தை கேட்டிருப்பதாகவும் கூறினார்.

கடந்த 22ஆம் தேதி, போர்ட் பிளையருக்கு புறப்பட்டுச் சென்றது விமானப்படைக்குச் சொந்தமான ஏ.என்.32 ரக விமானம். திடீரென அந்த விமானம் மாயமாகி உள்ள நிலையில், அது விபத்துக்குள்ளாகி கடலில் விழுந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இதுவரை விமானத்தின் கதி குறித்து எந்த தகவலும் கிடைக்க வில்லை. முதற்கட்டமாக கடலின் மேல்பகுதியில் நடைபெற்ற தேடு தல் வேட்டை தற்போது கடலுக்கு அடியிலும் நடந்து வருகிறது.

இந்நிலையில் செய்தியாளர்களி டம் பேசிய அமைச்சர் மனோகர் பாரிக்கர், விமானம் மாயமானதாகக் கூறப்படும் பகுதியில் 3,300 அடி முதல் 4,000 அடி வரை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளதாகக் கூறினார். "பத்து கப்பல்கள் தேடும் பணி யில் ஈடுபட்டுள்ளன. விமானம் மாயமான நேரத்தில் எடுக்கப்பட்ட செயற்கைகோள் புகைப்படம், பதி வான இதர சமிக்ஞைகள் தேவைப் படுகிறது. செயற்கைக்கோள் புகைப்படத்தை அமெரிக்காவிடம் கேட்டுள்ளோம்," என்றார் மனோ கர் பாரிக்கர். முதற்கட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது கடலில் கிடைத்த பொருட்களை ஆய்வுக்கு உட்படுத்தியதில், அவை மாயமான விமானத்தின் பாகங்கள் அல்ல என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே விமானத்தில் சென்றவர்களின் குடும்பத்தார் கூடுதல் தகவல்களுக்காக பதை பதைப்புடன் காத்திருக்கின்றனர்.