'கட்சியை விட்டு நீக்கியவர்களும் விரைவில் நீக்கப்படுவர்'

'கட்சியை விட்டு நீக்கியவர்களும் விரைவில் நீக்கப்படுவர்'

1 mins read

சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் ஆதரவாளர்களை காங்கிரஸ் கட்சியை விட்டு நீக்கியவர்களும் விரைவில் கட்சியை விட்டு நீக்கப்படுவர் என்று கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோவை செல்வம் உள்ளிட்ட ஆறு பேரை கட்சியை விட்டு நீக்கியது ஏற்றுக்கொள்ளவே முடியாத விஷயம் என்றார். "அதிகார வரம்பை மீறி செயல்பட்டு இவர்களை நீக்கியவர்களும் விரைவில் கட்சியிலிருந்து நீக்கப்படுவர். இந்த விஷயத்தை கட்சியின் தேசியத் தலைமைக்கு எடுத்துச்சென்றிருக்கிறோம்," என்றார் கார்த்தி சிதம்பரம்.