சென்னை: அண்மையில் மாயமான விமானப்படை விமானம் ஆந்திர வனப் பகுதியில் விழுந்திருக்கலாம் என புதிய சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து வனப்பகுதியில் தேடுதல் வேட்டை தொடங்கி இருப்ப தாகவும் கூறப்படுகிறது. கடந்த மாதம் 22ஆம் தேதி விமானப் படைக்குச் சொந்தமான சிறிய ரக விமானம் அந்தமானுக்குச் சென்று கொண்டிருந்தபோது தரைக் கட்டுப்பாட்டு அறையு டனான தொடர்பை இழந்தது. விமானம் மாயமாகி பல நாட்கள் ஆன நிலையில், அதன் கதி குறித்து இது வரை எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. மாயமான விமானத்தில் மொத்தம் 29 பேர் பயணம் செய்தனர். விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என முதலில் கருதப்பட்டது. கடற்பகுதியில் தேடுதல் நடவடிக்கை மேற் கொள்ளப்பட்ட நிலையில் இப்போது புதிய சந்தேகம் எழுந்துள்ளது.
அதன்படி ஆந்திர வனப்பகுதியில் விமானம் விழுந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. விமானம் விழுந்த பகுதி நக்சலைட்டு கள் ஆதிக்கம் நிறைந்தது என்றும் கூறப்படுகிறது. விமானப் படையைச் சேர்ந்த மீட்புக் குழுவினர் அங்கு தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்தத் தகவலை ஆந்திர அரசு அதிகாரிகள் மறுத்துள்ளனர். குறிப்பிட்ட அந்தப் பகுதியில் மாவோ யிஸ்டுகளைத் தேடும் பணி மட்டுமே நடந்து வருவதாக வும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் விசாகப்பட்டினம் காட்டுப்பகுதியில் விமானம் விழுந்ததை அங்கு வசிக்கும் பழங்குடியினர் நேரடியாகக் கண்டதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இது குழப்பத்தை அதிகரிப்பதாக உள்ளது. இதனால் விமானத்தில் பயணம் செய்தவர்களின் குடும்பத்தாரும் உறவினர்களும் கடும் மன இறுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். தேடுதல் நடவடிக்கைகளை மத்திய அமைச்சர் மனோகர் பாரிக்கர் உன்னிப்பாக கவனித்து வருகிறார் என மத்திய அரசு வட்டாரங் கள் தெரிவிக்கின்றன.

