கனிமொழி: மீனவர்கள் பாதிக்கப்படக் கூடாது

கனிமொழி: மீனவர்கள் பாதிக்கப்படக் கூடாது

1 mins read

பாளையங்கோட்டை: குளச் சல் துறைமுக விவகாரத் தில் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காமல் மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி வலியுறுத்தி உள்ளார். மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த எதிர்ப்பை பதிவு செய்யும் விதமாக பாளையங்கோட்டையில் நேற்று முன்தினம் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் கனிமொழி கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக மாநில, மாவட்ட அளவில் போராட்டங்களை நடத்துவது குறித்து கட்சித் தலைமையிடம் ஆலோசித்து முடிவு அறிவிக்கப்படும் என்றார்.

"குளச்சல்- துறைமுகத் திட்டம் குறித்து மீனவர்களின் கருத்துகளைக் கேட்டறிய வேண்டும். மீனவர்களின் வாழ்வாதாரங்கள் எந்த வகையிலும் பாதிக்கப்படக் கூடாது. "எனவே மீனவர்களின் கவலைகளைக் கருத்தில் கொண்டு இந்த விஷயத் தில் மத்திய அரசு நல்ல முடிவு எடுக்க வேண்டும் என்பதே திமுகவின் கோரிக்கை," என்று கனிமொழி மேலும் தெரிவித்தார்.