சென்னை: தமது மனைவி நாடக மாடுவதாகவும், முதல்வர் ஜெய லலிதா குறித்த அவரது விமர் சனங்களில் தமக்கு எந்தவித உடன்பாடும் இல்லையென்றும் சசிகலா புஷ்பா எம்பியின் கணவர் லிங்கேஸ்வரா திலகர் தெரிவித் துள்ளார். டெல்லி விமான நிலையத்தில் திமுக எம்பி திருச்சி சிவாவை கன்னத்தில் அறைந்ததையடுத்து பல்வேறு நெருக்கடிகளை எதிர் கொண்டு வருகிறார் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா.
தன்னை நாயைப் போல் நடத்தியதாகவும், தமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை என்றும் அவர் கூறினார். முதல்வரும் அதிமுக பொதுச்செயல ருமான ஜெயலலிதா போயஸ் தோட்டத்தில் வைத்து தமது கன்னத்தில் அறைந்ததாகவும், மாநிலங்களவை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுமாறு நிர்பந்தப் படுத்தியதாகவும் கூறுகி றார் சசிகலா புஷ்பா. திருச்சி சிவாவிடமும் திமுக தலைவர்களிடமும் பகிரங்க மன் னிப்பு கோருவதாக அவர் தெரி வித்ததையடுத்து திமுகவில் இணைவார் எனக் கூறப்பட்டது. இந்நிலையில், அவர் விரைவில் காங்கிரஸ் தலைவி சோனியா, ராகுல்காந்தியை சந்திக்க இருப் பதாகவும், அதைத் தொடர்ந்து காங்கிரசில் இணைவார் என்றும் செய்தி வெளியாகியுள்ளது.

