இலங்கையிலிருந்துநகைகள் கடத்தி வந்த மூவர் கைது

இலங்கையிலிருந்துநகைகள் கடத்தி வந்த மூவர் கைது

2 mins read

திருவனந்தபுரம்: இலங்கையில் இருந்து திருவனந்தபுரம் வழியாக துபாய் செல்லும் விமானம் நேற்று முன்தினம் திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு வந்தது. அந்த விமானத்தில் வந்த மூன்று பயணிகள் மீது சுங்க இலாகா அதிகாரிகளுக்குச் சந்தேகம் ஏற்பட்டது. அவர் களிடம் அதிகாரிகள் விசா ரணை நடத்தியபோது அவர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பதும் அவர்களது பெயர் ராமநாமசாமி, செல்லத்தம்பி சாமி, யோகேஸ் வரசாமி என்பதும் தெரிய வந்தது.

அவர்களை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அவர்கள் தங்கள் இடுப்புகளில் தங்க நகைகளை மறைத்துக் கடத்தி வந்தது தெரியவந்தது. அவர்கள் மூவரிடம் இருந்தும் 1 கிலோ 515 கிராம் எடையுள்ள தங்க நகைகளைப் பறிமுதல் செய்தனர். இலங்கை வாலிபர் கள் மூவரும் மத்திய புலனாய்வு காவல்துறையினரிடம் ஒப்ப டைக்கப்பட்டனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

காரில் தங்கக் கட்டிகள்

திருவனந்தபுரம் போத்தங் காடு அருகே மின்னல் வேகத் தில் சென்ற ஒரு சொகுசு கார் மற்றொரு கார் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. காவல்துறையினர் அந்தக் காரை 20 கிலோ மீட்டர் தூரம் விரட்டிச்சென்று பிடித்தனர். அந்தக் காரில் கொல்லம் அருகே கருநாகப்பள்ளியைச் சேர்ந்த சுஷாந்தும் (வயது 18), மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த ‌ஷம்பு ராமும் (22) இருந்தனர். அப்போது காரின் உள்ளே இரண்டு கிலோ எடையுள்ள தங்கக் கட்டிகள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. கருநாகப் பள்ளியில் ஒரு நகைக்கடையில் வேலை செய்வ தாகவும் கடை உரிமையாளர் சொன்ன தகவலின்படி அடை யாளம் தெரிந்த ஒரு நபரிடம் இருந்து இந்தத் தங்கக் கட்டி களை வாங்கிக்கொண்டு நகைக் கடைக்குச் செல்வதாக வும் அவர்கள் தெரிவித்தனர். அவர்களை நகைக்கடைக்கு அழைத்துச் சென்று விசாரிக்க காவல்துறையினர் திட்டமிட் டுள்ளனர்.