புதுச்சேரி: எந்தவகை கோப்பு களாக இருந்தாலும் அவை எந்த வித ஒளிவுமறைவுமின்றி வெளிப் படைத் தன்மையுடன் அமைச்சர் களுக்குத் தெரியும் வகையில்தான் ஆளுநரிடம் வழங்கவேண்டும் என்று அதிகாரிகளுக்கு நாரா யணசாமி கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார். இதன்மூலம் ஆளுநர் கிரண்பேடி, புதுவை முதல்வர் நாராயணசாமி இடையே மோதல் வெடித்துள்ளது. புதுவையில் நடந்த சட்டசபை தேர்தலில் ஆளும் கட்சியான என்.ஆர். காங்கிரஸ் தோல்வி அடைந்து காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றியது.
புதுவைக்கு புதிய ஆளுநராக முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி கிரண்பேடி நியமனம் செய்யப்பட, நாராயணசாமி முதல்-வர் ஆனார். கிரண்பேடி ஆளுநராக பொறுப் பேற்றதுமே உடனடியாக அதிகாரி கள் கூட்டத்தைக் கூட்டி பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்தார். தேர்ந்து எடுக்கப்பட்ட அமைச் சரவை இருக்கும்போது ஆளுநர் தன்னிச்சையாகச் செயல்பட்டது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி யது. புதுவையில் இரட்டை அரசு செயல்படுகிறது என்று எதிர்க் கட்சிகள் குற்றம்சாட்டின. அதற்கு பதிலளித்த நாராயண சாமி, "நாங்கள் இருவருமே புதுவை முன்னேற்றத்துக்குப் பாடு பட்டு வருகிறோம். அவரவரின் அதிகாரத்துக்குட்பட்டு செயல் பட்டு வருகிறோம்," என்றார். இந்நிலையில், ஆளுநர் தொடர்ந்து அதிகாரிகளுடன் ஆலோசிப்பதும் அவர்களுக்கு உத்தரவிடுவதுமாக இருந்தார்.
அத்துடன், அமைச்சர்களுக்கே தெரியாமல் அவர்கள் துறையில் உள்ள கோப்புகளை அதிகாரிகள் மூலமாக வரவழைத்து ஆளுநர் பார்வையிட்டார். அண்மையில் ஆளுநர் டெல்லி சென்று பிரதம ரையும் மத்திய அமைச்சர்களையும் சந்தித்தார். அப்போதும் புதுவை அமைச்சர்களுக்குத் தெரியாமல் பல்வேறு கோப்புகளையும் அவர் எடுத்துச்சென்று மத்திய அமைச் சர்களிடம் காண்பித்ததாகத் தெரிகிறது. அதிகாரிகள் பலரும் அமைச்சர் கள் சொல்வதைக்கூட கண்டு கொள்ளாமல் ஆளுநர் உத்தரவை செயல்படுத்துவதிலேயே குறியாக இருப்பது குறித்து அமைச்சர்கள் முதல்வரிடம் புகார் கூறினர். "அதிகாரிகள் எங்களை மதிக் காமல் நடந்து கொள்கிறார்கள். ஆளுநருக்கு மட்டுமே கட்டுப்படு கிறார்கள்," என்றனர்.
இதையடுத்து நேற்று தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளையும் கூட்டி ஆலோசனை நடத்திய நாராயணசாமி, அதிகாரிகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தார். "புதுவை யூனியன் பிரதேசமாக இருந்தாலும் இந்த மாநிலத்துக் கென்று தனி அதிகாரங்கள் உள் ளன. அமைச்சரவை முடிவை ஆளுநர் ஏற்கவேண்டும் என்று விதிகள் தெளிவாக உள்ளன. எனவே, அதிகாரிகள் அமைச் சர்களுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும். அமைச்சர்களுக்குத் தெரியாமல் எந்த கோப்புகளும் ஆளுநரிடம் செல்லக்கூடாது.
"ஆளுநர் வாட்ஸ்-அப் மூலம் உத்தரவிடுவது நடைமுறையில் இல்லாத ஒன்று. அது அங்கீ கரிக்கப்பட்டதும் அல்ல. எனவே, இதை உத்தரவாக ஏற்று அதி காரிகள் செயல்பட வேண்டிய அவசியமில்லை. எதுவாக இருந் தாலும் எங்களுக்குத் தெரிந்து தான் நடக்கவேண்டும்," என்று அதிகாரிகளுக்கு கடும் எச்ச ரிக்கை விடுத்துள்ளார் நாராயண சாமி. 2016-08-04 03:50:00 +0800

