பாட்னா: பீகாரில் இளையர் ஒருவர், மாமியாரை திருமணம் செய்து சுற்று வட்டார மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக் கிறார். மாதேபுரா மாவட்டத்தில் வசித்துவரும் சூராஜ், 22, என்பவருக்கும் லலிதா என்பவருக்கும் சில மாதங் களுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்துக்குப் பிறகு சூராஜிற்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் அவரை கவனித்துக்கொள்வதற்காக லலிதாவின் அம்மா ஆஷா தேவி, வயது 42, மருமகனின் வீட்டிற்கு வந்தார்.
இந்த நிலையில் ஆஷாவின் கணவர் டெல்லியில் பணி புரிந்து வந்ததால் சூராஜ்ஜும் ஆஷாவும் அடிக்கடி சந்தித்து வெளியே சென்று வந்தனர். இதற்கிடையே அவர்களுக்கு இடையே காதல் மலர்ந்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர். கடந்த ஜூன் மாதம் ஊரை விட்டு ஓடிய இருவரும் பின்னர் சொந்த கிராமத்திற்குத் திரும்பி வந்தனர். ஊர் பஞ்சாயத்தும் அவர்கள் சேர்ந்து வாழ அனுமதியளித்தது. இதற்கிடையே கணவரைப் பிரிந்த லலிதா தற்போது டெல்லியில் தந்தையுடன் வசித்து வருவதாகக் கூறப்படுகிறது.

