மருத்துவ சிகிச்சை நாடி பல்வேறு நாடுகளில் இருந்தும் இந்தியா வுக்கு வருவோர் எண்ணிக்கை பெருகி வருகிறது. அவர்களைக் கவர்ந்திழுக்கும் அம்சங்களில் இந்திய சுற்றுப் பயணத்துறை கவனம் செலுத்தி வருகிறது. அதேசமயம், ஆப்கானிஸ் தான், பங்ளாதேஷ், பாகிஸ்தான், ஈராக், உஸ்பெகிஸ்தான், சவூதி அரேபியா, பஹ்ரைன், ஏமன் போன்ற நாடுகளில் இருந்து சிகிச்சை பெற வருவோரின் எண்ணிக்கை கடந்த மூன்றாண் டுகளாக அதிகரித்து வருவது இந்திய அரசாங்கத்தை விழிப் படையச் செய்துள்ளது. உலகளவில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அச்சுறுத்தல் நிலவி வருவதால் இதுபோன்ற நாடு களிலிருந்து சிகிச்சை என்ற பெயரில் நாட்டுக்குள் நுழை வோரை இந்தியா கண்காணிக்க தொடங்கியுள்ளது.
ஐஎஸ்ஐஎஸ் தாக்கம் மிகுந்த வட்டாரங்களில் இந்த நாடுகள் இடம்பெற்று உள்ளதால் அங் கிருந்து வருவோர் சிகிச்சைக் காக வந்தாலும் அவர்களின் நட வடிக்கைகளை அணுக்கமாகக் கண்காணிக்க இந்திய உள்துறை அமைச்சு உத்தரவிட்டுள்ளது. "இது மிகவும் கவனிக்கப்பட வேண்டிய அம்சம். மருத்துவ விசாவில் இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டினரை எவ்வாறு சோதிக்க வேண்டும் என்று அமைச்சின்கீழ் உள்ள அத்தனை பாதுகாப்பு அமைப்புகளுக்கும் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு உள்ளன," என்று உள்துறை அமைச்சின் அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி 'இந்தியா டுடே' செய்தி வெளியிட்டுள்ளது. மருத்துவ விசாவில் இந்தியா செல்லும் வெளிநாட்டினரின் எண் ணிக்கை 2013ஆம் ஆண்டில் 56,129ஆக இருந்தது. அதற் கடுத்த ஆண்டு அந்த எண் ணிக்கை 75,671க்கு உயர்ந்தது.

