இலங்கைத் தூதரகம் முன் முற்றுகைப் போராட்டம்

இலங்கைத் தூதரகம் முன் முற்றுகைப் போராட்டம்

1 mins read
3f0d5ff6-2e62-44a3-9d7d-45f08ef0bb29
-

சென்னை: இலங்கை துணைத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் காரணமாக சென்னையில் பரபரப்பு நிலவி யது. இப்போராட்டத்தில் ஈடு பட்ட 200க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர். இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரின்போது அப்பாவித் தமிழர்கள் 104 பேர் மர்மமான முறையில் இறந்த தாகக் கூறப்படுகிறது. இதைக் கண்டித்தும், இது தொடர்பாக நீதி விசாரணை நடத்தக் கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் நேற்று காலை நடைபெற்றது.

இச்சமயம் நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள இலங்கைத் தூதரகம் அருகே ஏராளமானோர் கூடினர். தூதரகத்தை அவர்கள் முற்றுகையிட முயன்றபோது காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். முன்னதாக செய்தியாளர்க ளிடம் பேசிய தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலர் கோவை ராமகிருஷ் ணன், இலங்கையில் உள்ள தமிழர்களுக்குப் பாதுகாப்பற்ற நிலையே நிலவுவதாகத் தெரிவித்தார்.