சென்னை: அமெரிக்காவில் நடக்கும் இளம் அரசியல் தலைவர்கள் மாநாட்டில் திமுக செய்தி தொடர்பு பிரிவு நிர்வாகியும் வழக்கறிஞ ருமான தமிழன் பிரசன்னா பங்கேற்றுள்ளார். அமெரிக்க கல்வி - கலாசார அமைச்சகம் நடத்தும் இந்த மாநாடு நேற்று தொடங்கியது. வரும் 28ஆம் தேதி வரை நடைபெற உள்ள இம்மாநாட்டில், ஜெர்மனி, இஸ்ரேல், இத்தாலி, ஜப்பான், ஜோர்டான், லிப்ரியா, மாலாவி, மெக்சிகோ, மொராக்கோ, நேபாளம், நைஜீரியா, ஃபிலிப்பைன்ஸ், போலந்து, சிரியா, ஸ்லோவிக்கியா, தென்னாப்பிரிக்கா, தைவான், உகாண்டா உள்ளிட்ட 21 நாடுகளைச் சேர்ந்த இளம் அரசியல் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்த மாநாட்டில் இந்த ஆண்டு இந்தியாவின் சார்பில் கலந்து கொள்வதற்காக தமிழன் பிரசன்னா அமெரிக்க அரசால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்கா மற்றும் இந்தியாவின் வெளிப்படை நிர்வாகம், நிர்வாக ஒழுங்குமுறை, மக்கள் தொடர்பு, கலாசார மேம்பாடு ஆகிய தலைப்புகளின் கீழ் அவர் உரையாற்றுகிறார். வளர்ந்து வரும் இளம் அரசியல் தலைவர்களுக்கான மாநாடு கடந்த 73 ஆண்டுகளாக அமெரிக்காவில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

