சென்னை: பாலாறு தடுப்பணை விவகாரத்தில் அனைத்துக் கட்சிகளுடன் பிரதமரைச் சந்திக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக மாநில இளையரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். வேலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு தடுப்பணை கட்டியதால் 4.5 லட்சம் ஏக்கர் விவசாய நிலமும் 80 லட்சம் மக்களின் குடிநீர்த் தேவையும் பாதிக்கிறது என்றார். பாலாற்றின் குறுக்கே அணையின் உயரத்தை அதிகரித்த ஆந்திர அரசைக் கண்டித்து வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் எதிரே பாமக சார்பில் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதன் பின்னர் செய்தி யாளர்களைச் சந்தித்தார் அன்புமணி.
"மத்திய வனத்துறை, சுற்றுச் சூழல் துறை, தமிழக அரசின் ஒப்புதல் எதையும் பெறாமல் தடுப் பணை கட்டுமானப் பணி நடக் கிறது. முதல்வர் ஜெயலலிதா உச்சநீதிமன்ற வழக்கை துரிதப்படுத்த வேண்டும். அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டிப் பிரதமரைச் சந்திக்க வேண்டும்," என்றார் அன்புமணி.
வேலூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பும் அன்புமணி ராமதாஸ். படம்: தகவல் ஊடகம்

